சீவக சிந்தாமணி 1451 - 1455 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1451 - 1455 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1451. மாசு இலாள் பிறந்த ஞான்றே மதிவலான் விதியின் எண்ணிக்
காசு இலாள் கண்ட போழ்தே கதும் என நாணப் பட்டான்
தூசுலாம் அல்குலாட்குத் துணைவனாம் புணர்மின் என்று
பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான்

விளக்கவுரை :

1452. தாழ்தரு பைம்பொன் மலைத் தட மலர்த் தாம மாலை
வீழ் தரு மணி செய்மாலை இவற்றிடை மின்னின் நின்று
சூழ் வளைத் தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே

விளக்கவுரை :

[ads-post]

1453. சேயிழை கணவன் ஆகும் திருமகன் திறத்து நாளும்
ஆயிரத்து எட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி
ஏயின வகையினாலே ஆறு இரண்டு எல்லை ஆண்டு
போயின என்ப மற்று அப் பூங்கொடிச் சாயலாட்கே

விளக்கவுரை :

1454. முருக்கிதழ் குலிகம் ஊட்டி வைத்தன முறுவல் செவ்வாய்த்
திருக் கவின் நிறைந்த வெம் கண் பணை முலைத் தேம் பேய் கோதைப்
புரிக் குழல் பொன் செய் பைம்பூண் புனை இழை கோலம் நோக்கித்
தரிக்கலாது உருகி நையும் தடமலர்க் கோதை நற்றாய்

விளக்கவுரை :

1455. மா அடு மருட்டும் நோக்கின் மதி முகம் மழைக் கண் மாசுஇல்
பூவொடு புரையும் சாயல் புனை நலம் தனித்து வைக
ஏ அடு பிணையின் நோக்கி இறைவளை கழல நின்ற
தாய் படும் துயரம் எல்லாம் தார் அவன் நோக்கினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books