சீவக சிந்தாமணி 1446 - 1450 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1446 - 1450 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1446. எறி சுறவு இளையவர் ஏந்து பூங்கொடி
மறி திரை வரை புரை மாடம் மாக்கலம்
பெறல் அருந் திரு அனார் அமுதம் பேர் ஒலி
அறை கடல் வள நகர் ஆயது என்பவே

விளக்கவுரை :

1447. மதி அகடு உரிஞ்சும் சென்னி மாட நீள் மறுகு தோறும்
பொதி அவிழ் மாலை வீழ்ந்து பொன் செய் நல் கலன்கள் சிந்தி
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்திப்
புதியவர்க்கு இயங்கல் ஆகாப் பொற்பொடு பொலிந்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

1448. கேமமாபுரம் எனும் கேடில் நல் இசைப்
பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன்னகர்த்
தாம நீள் நெடுங் குடைத் தரணி காவலன்
நாமம் வேல் நரபதி தேவன் என்பவே

விளக்கவுரை :

1449. அந் நகர்க்கு அரசனே அனைய ஆண் தகை
மெய்ந் நிகர் இலாதவன் வேத வாணிகன்
கைந் நிகர் அமைந்த வேல் கமழும் தாரினன்
மைந் நிகர் மழைக் கணார் மருட்ட வைகுவான்

விளக்கவுரை :

1450. வார் சிலை வடிப்ப வீங்கி வரை எனத் திரண்ட தோளான்
சோர் புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் மனைவி பெற்ற
சீர்நலம் கடந்த கேமசரி எனத் திசைகள் எல்லாம்
பேர் நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக்கு ஆகி நின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books