சீவக சிந்தாமணி 1441 - 1445 of 3145 பாடல்கள்
1441. சண்பக நறுமலர் மாலை நாறு சாந்து
ஒண் பழுக் காயினோடு உருவ மெல்லிலை
உண் பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது
வண் புகழ் நாட்டது வண்ணம் இன்னதே
விளக்கவுரை :
1442. கரும்பு அணி வள வயல் காமர் தாமரை
வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல்
அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல்
சுரும்பு சூழ் இலம்பகத் தோற்றம் ஒத்ததே
விளக்கவுரை :
[ads-post]
1443. வண்டு வாழ் கொடுந் துறைக் கன்னி வாளை மேல்
நண்டு உகிர் உற்று என நடுங்கி நாணினால்
விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ்புனல்
கொண்ட பூங் கிடங்கு அணி நகரம் கூறுவாம்
விளக்கவுரை :
1444. அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்பு உரி
புகழ் தரு மேகலை நாயில் பூண் முலை
திகழ் மணிக் கோபுரம் திங்கள் வாள் முகம்
சிகழிகை நெடுங் கொடி செல்விக்கு என்பவே
விளக்கவுரை :
1445. நாட்டிய மணி வரை கடைந்து நல் அமிர்து
ஊட்டினும் அதனை விட்டு உறைநர் இன்மையால்
ஈட்டிய வளநிதி இறை கொள் மாநகர்ச்
சூட்டு வைத்து அனையது அச்சுடர்ப் பொன் இஞ்சியே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1441 - 1445 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books