சீவக சிந்தாமணி 1436 - 1440 of 3145 பாடல்கள்
1436. மெய் வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய் வகை இன்றித் தேறல் காட்சி ஐம் பொறியும் வாட்டி
உய் வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்
விளக்கவுரை :
1437. குன்று அனான் உரைப்பக் கேட்டே பாகத்தார் குடும்பம் நீக்கி
இன்று கண் விடுக்கப் பட்டேம் யாம் என எழுந்து போகி
வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நல் நெறியைப் பெற்றார்
சென்றது பருதி வட்டம் செம்மலும் அசைவு தீர்ந்தான்
விளக்கவுரை :
[ads-post]
1438. அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே
வசையின் நீங்கியினார் வழிகாட்டலின்
திசையும் யாறும் தெரிந்து கொண்டு ஏகினான்
மிசையும் இல்லது ஓர் மெய்ப் பொறி யாக்கையான்
விளக்கவுரை :
1439. படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கயத்
தடம் பல தமீஇயது தக்க நாடு அது
வடம் கெழு வருமுலை மகளிர் மாமை போன்று
இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான்
விளக்கவுரை :
1440. தேம் கயத்து அணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
பூங் குழல் மடந்தையர் புனைந்த சந்தமும்
ஆங்கு எலாம் அகில் புகை அளாய வாசமும்
தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1436 - 1440 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books