சீவக சிந்தாமணி 1431 - 1435 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1431 - 1435 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1431. நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னில்
காட்டு இடைக் கரடி போகிக் கயம் மூழ்கிக் காட்டில் நின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமின் என்றான்

விளக்கவுரை :

1432. கலைவளர் கிளவியார் தம் காமர் மென் சேக்கை நீங்கி
இலைவளர் குரம்பை அங்கண் இரு நிலம் சேக்கை ஆக
முலை வளர் ஆகம் தோய முழுவினை முரியும் ஆயின்
மலை வளர் குறவர்க்கு அம் மா வினைகளும் மாயும் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

1433. வெண் நிறத் துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற
ஒண் நிற உதிரம் தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே
பண் நிறக் கிளவியார் தம் பசையினால் பிறந்த பாவம்
கண் நிற முலையினர் தம் கலவியால் கழிக்கல் ஆமே

விளக்கவுரை :

1434. நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கிக்
கொண்டு போய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே
கண்டத்தின் நாவியார் தம் கடிமனை துறந்து காட்டுள்
பண்டைச் செய்தொழிலின் பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே

விளக்கவுரை :

1435. நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா
காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இவ் யாக்கை இன்னே
வேய் முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்றுப்
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரிமின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books