சீவக சிந்தாமணி 1426 - 1430 of 3145 பாடல்கள்
1426. ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்
உய்யுமேல் தொடர்ப் பாட்டின் இங்கு யாவையும்
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான்
விளக்கவுரை :
1427. வீடு வேண்டி விழுக்ச்சடை நீட்டல் மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண் தலை
ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை
பீடு இலாப் பிறவிக்கு வித்து என்பவே
விளக்கவுரை :
[ads-post]
1428. ஏம நல்நெறி எம் நெறி அல் நெறி
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம்
காமன் தாதை நெறியின் கண் காளை நீ
தீமை உண்டு எனில் செப்பு எனச் செப்பினான்
விளக்கவுரை :
1429. தூங்கு உறிக் கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல்
பாங்கரில் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே
விளக்கவுரை :
1430. அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று
சொல்லிய வகையின் நோற்பத் துணியும் வெவ் வினைகள் என்னி
கல்லுண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம்
புல்லிய வினையை வென்று புறக் கொடை காணும் அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1426 - 1430 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books