சீவக சிந்தாமணி 1421 - 1425 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1421 - 1425 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1421. இனிதின் இங்ஙனம் ஏத்தி வலம் கொண்டு
முனிவர் சித்திர கூடம் முனாது எனத்
தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர்
பனி கொள் பூம்பொழில் பள்ளி கண்டான் அரோ

விளக்கவுரை :

1422. புல்லும் அல்லியும் போகு உயர் நீள் கழை
நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும்
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா
நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்

விளக்கவுரை :

[ads-post]

1423. அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள்
மருவி வீடு வளைக்குறும் மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவில் தீத் தொழில் சிந்தையின் மேயினார்

விளக்கவுரை :

1424. வள்ளி இன் அமுதும் வரை வாழையின்
தௌளு தீம் கனியும் சில தந்த பின்
வெள்ள மாரியனாய் விருந்து ஆர்க என
உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார்

விளக்கவுரை :

1425. பாங்கின் மாதவர் பால் மதி போன்று இவன்
வீங்கு கல்வியன் மெய்ப் பொருள் கேள்வியன்
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம்
ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books