சீவக சிந்தாமணி 1416 - 1420 of 3145 பாடல்கள்
1416. செல்வர் மனத்தின் ஓங்கித் திரு இல் மாந்தர் நெஞ்சின்
எல்லை இருளிற்று ஆகிப் பூந்தாது இனிதின் ஒழுகிக்
கொல்லும் அரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பின்
செல்லச் செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான்
விளக்கவுரை :
1417. சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா
வனையல் ஆகா உருவம் நோக்கி மைந்தற்கு இரங்கி
இனைவ போலும் வரையின் அருவி இனிதின் ஆடி
நனை கொள் போது வேய்ந்து நாதன் பாடுகின்றான்
விளக்கவுரை :
[ads-post]
1418. செய்தான் இருவினையின் பயத்தைச் சேரும் சென்று என்றி
எய்தான் அதன் பயத்தைப் பிறனே துய்த்தல் இயல்பு என்றி
கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர் பூம் பிண்டிக் கோமானே
இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னைத் தொழுதேனே
விளக்கவுரை :
1419. உண்டே தனது இயல்பின் உணரும் காலை உயிர் என்றி
உண்டாய அவ் உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி
வண்டு ஆர்த்து நாற் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து
கொண்டு ஏந்து பூம் பிண்டிக் கோமான் நின்னைத் தொழுதேனே
விளக்கவுரை :
1420. காதலால் எண் வினையும் கழிப என்றி அக் காதல்
ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால்
போது உலாய்த் தேன் துளித்துப் பொழிந்து வண்டு திவண்டு உலாம்
கோதை தாழ் பூம் பிண்டிக் கோமான் நின்னைத் தொழுதேனே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1416 - 1420 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books