சீவக சிந்தாமணி 1411 - 1415 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1411 - 1415 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1411. நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடுங் கணாள் காதலானை
ஐ இரு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் இப்பால்
பொய் உரை அன்று காணீர் போமினம் போகி நுங்கள்
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரைமின் என்றான்

விளக்கவுரை :

கேமசரியார் இலம்பகம்

1412. வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின்
தேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன் தேம் கொள்
நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய
கானம் வழங்கல் மேவிக் காலின் ஏகினானே

விளக்கவுரை :

[ads-post]

1413. சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர் தம்
இலை கொள் பூந் தார் உழுத இன்ப வருத்தம் நீங்க
முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி உள்கும் மொய்ம்பன்
மலை கொள் கானம் உன்னி மகிழ்வொடு ஏகுகின்றான்

விளக்கவுரை :

1414. கனி கொள் வாழைக் காட்டுள் கருமை மெழுகியவை போன்று
இனிய அல்லா முகத்த முசுவும் குரங்கும் இரியத்
துனிவு தீர நோக்கித் தோன்றல் செல்லும் முன்னால்
பனி வெண் திரை சூழ் கடல் போல் பழுவம் தோன்றிற்று அவனே

விளக்கவுரை :

1415. பருகுவாரின் புல்லிப் பயம் கண் மாறத் துறக்கும்
முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி
உருவப் பூங் கொம்பு ஒசியப் புல்லித் தீம் தேன் பருகி
அருகு வாய் விட்டு ஆர்ப்ப அண்ணல் மெல்லச் சென்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books