சீவக சிந்தாமணி 1406 - 1410 of 3145 பாடல்கள்
1406. பொய்கையுள் கமலத்து அம் கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப
வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கு ஒளித் தடக்கை நீட்டி
மை இருள் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கிப் பனிவரை நெற்றி சேர்ந்தான்
விளக்கவுரை :
1407. செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம்
அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு அரசனும் அவலம் எய்தி
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே
இவ்வழித் தம்மின் என்றான் இவுளித் தேர்த் தானையானே
விளக்கவுரை :
[ads-post]
1408. மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதகத்
தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு
முன்னினான் வடதிசை முகம் செய்து என்பவே
பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான்
விளக்கவுரை :
1409. வீக்கினான் பைங் கழல் நரல வெண் துகில்
ஆக்கினான் இரு துணி அணிந்த பல் கலன்
நீக்கினான் ஒரு மகற்கு அருளி நீள்நெறி
ஊக்கினான் உவவு உறும் மதியின் ஒண்மையான்
விளக்கவுரை :
1410. வேந்தனால் விடுக்கப் பட்டார் விடலையைக் கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே
போந்ததும் போய கங்குல் போம் வழிக் கண்டது உண்டேல்
யாம் தலைப் படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1406 - 1410 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books