சீவக சிந்தாமணி 1401 - 1405 of 3145 பாடல்கள்
1401. விரை செய் தாமரை மேல் விளையாடிய
அரைச அன்னம் அமர்ந்துள ஆயினும்
நிரை செய் நீல நினைப்பில என்றனன்
வரை செய் கோல மணம் கமழ் மார்பினான்
விளக்கவுரை :
1402. பொன் விளைத்த புணர் முலையாள் சொல
இன் அளிக் குரல் கேட்ட அசுண மா
அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள் அரோ
மின் வளைத்தன மேகலை அல்குலாள்
விளக்கவுரை :
[ads-post]
1403. அன்னம் தான் அவன் தாமரைப் போது நீ
நின்னை நீங்கினன் நீங்கலன் காதலான்
இன்னதால் அவன் கூறிற்று எனச் சொன்னாள்
மன்னன் ஆர் உயிர் மா பெருந் தேவியே
விளக்கவுரை :
1404. சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற போதே
பரிவுறும் நலத்த அன்றே பங்கயம் அன்னதே போல்
வரி வளைத் தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால்
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள்
விளக்கவுரை :
1405. நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது
அம் சிறைக் கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும்
அம் சிறைக் கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்றே
மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1401 - 1405 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books