சீவக சிந்தாமணி 1396 - 1400 of 3145 பாடல்கள்
1396. வடிமலர்க் காவின் அன்று வண் தளிர்ப் பிண்டி நீழல்
முடி பொருள் பறவை கூற முற்று இழை நின்னை நோக்கிக்
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன்
கொடியனாய் பிழைப்புக் கூறேன் குழையல் என்று எடுத்துக் கொண்டாள்
விளக்கவுரை :
1397. அலங்கலும் குழலும் தோழி அம் கையின் அடைச்சி அம்பூம்
பொலங் கலக் கொடி அனாள் தன் கண் பொழி கலுழி ஒற்றிக்
கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசைக் கொண்டிருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1398. கண் கனிந்து இனிய காமச் செவ்வியுள் காளை நீங்கத்
தெண் பனி அனைய கண்ணீர்ச் சேயிழை தாயர் எல்லாம்
தண் பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார்
பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி ஆங்குக்
விளக்கவுரை :
1399. சில்லரிச் சிலம்பு சூழ்ந்த சீறடித் திருவின் நற்றாய்
முல்லை அம் குழலினாய் நின் முலை முதல் கொழு நன் மேல் நாள்
சொல்லியும் அறிவது உண்டோ எனக் குழைந்து உருகி நைந்து
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்று கின்றாள்
விளக்கவுரை :
1400. வினைக்கும் செய் பொருட்கும் வெயில் வெம் சுரம்
நினைத்து நீங்குதல் ஆண் கடன் நீங்கினால்
கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன்
மனைக் கண் வைகுதல் மாண்பொடு எனச் சொன்னாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1396 - 1400 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books