சீவக சிந்தாமணி 1391 - 1395 of 3145 பாடல்கள்
1391. பிரிந்தவற்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா
முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய்
பரிந்து அழுவதற்குப் பாவாய் அடி இட்ட வாறு கண்டாய்
விளக்கவுரை :
1392. அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது நங்கள்
என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது சேர்ந்த
துன்பத்தால் துகைக்கப் பட்டார் துகைத்த அத் துன்பம் தாங்கி
இன்பம் என்று இருத்தல் போலும் அரியது இவ் உலகில் என்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1393. மயற்கை இம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு
இயற்கையே பிரிவு சாதல் இமைப்பிடைப் படாதது ஒன்றால்
கயல் கணின் அளவும் கொள்ளார் கவற்சி உள் கவற்சி கொண்டார்
செயற்கை அம் பிறவி நச்சுக் கடல் அகத்து அழுந்துகின்றார்
விளக்கவுரை :
1394. இளமையில் மூப்பும் செல்வத்து இடும்பையும் புணர்ச்சிப் போழ்தில்
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி
விளை மதுக் கமழும் கோதை வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுயர் அவலம் வேண்டா கண் இமைப்பு அளவும் என்றாள்
விளக்கவுரை :
1395. முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய்ம் மலர்த் தாரினான் நம்
கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் கவல வேண்டா
பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் பொன்னே
நித்தில முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் கண்டாய்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1391 - 1395 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books