சீவக சிந்தாமணி 1386 - 1390 of 3145 பாடல்கள்
1386. மெழுகினால் புனைந்த பாவை வெய்து உறுத்தாங்கு ஓவாது
அழுது நைந்து உருகுகின்ற ஆயிடைத் தோழி துன்னிக்
கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க் கிளை நரம்பு அனைய சொல்லாள்
கழி பெருங் கவலை நீங்கக் காரண நீர சொன்னாள்
விளக்கவுரை :
1387. தௌ அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி
அள் உற அளிந்த காமம் அகம் உறப் பிணித்ததேனும்
உள் உற வெந்த செம்பொன் உற்ற நீர்ப் புள்ளி அற்றால்
கள் உற மலர்ந்த கோதாய் காதலர் காதல் என்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1388. ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளி மலர் நெடுங் கணாரைக்
கூடு அரி உழுவை போல முயக்கு இடைக் குழையப் புல்லி
ஆடவர் அழுந்தி வீழ்ந்தும் பிரிவு இடை அழுங்கல் செல்லார்
பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள்
விளக்கவுரை :
1389. பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும்
வேதனை மரங்கள் நாறி வேட்கை வேர் வீழத்து முற்றிக்
காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு அவலம் பூத்து
மா துயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும்
விளக்கவுரை :
1390. தேன் சென்ற நெறியும் தௌ நீர்ச் சிறுதிரைப் போர்வை போர்த்து
மீன் சென்ற நெறியும் போல விழித்து இமைப்பவர்க்குத் தோன்றா
மான் சென்ற நோக்கின் மாதே மாய்ந்து போம் மக்கள் யாக்கை
ஊன் சென்று தேயச் சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1386 - 1390 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books