சீவக சிந்தாமணி 1381 - 1385 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1381 - 1385 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1381. அருள் தேர் வழி நின்று அறனே மொழிவாய்
பொருள் தேர் புலன் எய்திய பூங் கழலாய்
இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய்
உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே

விளக்கவுரை :

1382. மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ
உகவா உனது உள்ளம் உவர்த்ததுவோ
இகவா இடர் என் வயின் நீத்திட நீ
தகவா தகவு அல்லது செய்தனையே

விளக்கவுரை :

[ads-post]

1383. குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால்
தளர் அன்ன நடையவள் தாங்க லளாய்
ஒளிர் பொன் அரிமாலை ஒசிந்து இஙனே
மிளிர் மின் என மின் நிலம் எய்தினளே

விளக்கவுரை :

1384. தழும் மாவலி மைந்த எனத் தளரா
எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா
விழும் மீ நிலம் எய்தி மிளர்ந்து உருகா
அழுமால் அவலித்து அவ் அணங்கிழையே

விளக்கவுரை :

1385. கரப்பு நீர்க் கங்கை அம் கள் கடிமலர்க் கமலப் பள்ளித்
திருத் தகு திரைகள் தாக்கச் சேப்புழிச் சேவல் நீங்கப்
பரல் தலை முரம்பின் சின்னீர் வறுஞ் சுனைப் பற்று விட்ட
அரத்த வாய்ப் பவளச் செந் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books