சீவக சிந்தாமணி 1376 - 1380 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1376 - 1380 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1376. நிரை வீழ் அருவி நிமிர் பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரி வெண் நிலவே
உரையீர் உயிர் காவலன் உள் வழியே

விளக்கவுரை :

1377. எரி பொன் உலகின் உறைவீர் இதனைத்
தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின்
பரிவு ஒன்றிலிரால் படர்நோய் மிகுமால்
அரிதால் உயிர் காப்பு அமரீர் அருளீர்

விளக்கவுரை :

[ads-post]

1378. புணர்வின் இனிய புலவிப் பொழுதும்
கணவன் அகலின் உயிர் கை அகறல்
உணர்வீர் அமரர் மகளீர் அருளிக்
கொணர்வீர் கொடியேன் உயிரைக் கொணர்வீர்

விளக்கவுரை :

1379. நகை மா மணி மாலை நடைக் கொடி நின்
வகை மா மணி மேகலை ஆயினதேல்
அகையாது எனது ஆவி தழைக்கும் எனத்
தகை பாட வலாய் தளர்கோ தளர்கோ

விளக்கவுரை :

1380. புனைதார் பொர நொந்து பொதிர்ந்த என
வினையார் எரி பூண் முலை கண் குளிர
உன கண் மலரால் உழுது ஓம்ப வலாய்
நினையாது நெடுந் தகை நீத்தனையே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books