சீவக சிந்தாமணி 1371 - 1375 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1371 - 1375 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1371. கொலை கொள் வேலவன் கூடலன் ஏகினான்
இலை கொள் பூண் நுமக்கு என்செயும் ஈங்கு எனா
மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன்
முலை கொள் பேர் அணி முற்றிழை சிந்தினாள்

விளக்கவுரை :

1372. அருங் கலம் கொடி அன்னவன் ஏகினான்
இருந்து இவ் ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா
மருங்குல் நோவ வளர்ந்த வன முலைக்
கருங் கண் சேந்து கலங்க அதுக்கினாள்

விளக்கவுரை :

[ads-post]

1373. மஞ்சு சூழ்வரை மார்பனைக் காணிய
துஞ்சல் ஓம்புமின் என்னவும் துஞ்சினீர்
அஞ்சனத்தொடு மை அணிமின் என
நெஞ்சின் நீள் நெடுங் கண்மலர் சீறினாள்

விளக்கவுரை :

1374. அரக்கு உண் தாமரை அன்ன தன் கண் மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇக் கொலோ
வருத்தம் உற்றனள் என்று கொல் மேகலை
குரல் கொடாது குலுங்கிக் குறைந்ததே

விளக்கவுரை :

1375. துனிவாயின துன்னுபு செய்து அறியேன்
தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடுதான்
இனியான் இஙனே உளனே உரையீர்
பனியார் மலர் மேல் படு வண்டு இனமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books