சீவக சிந்தாமணி 1366 - 1370 of 3145 பாடல்கள்
1366. மை இல் வாள் நெடுங் கண் வளராதன
மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ
ஐயன் சென்றுழிக் கூறுக என்று ஆய்மயில்
கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள்
விளக்கவுரை :
1367. வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள்
விளக்குவாய் விளக்கே விளக்காய் இவண்
அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர்
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள்
விளக்கவுரை :
[ads-post]
1368. பருகிப் பாயிருள் நிற்பின் அறது எனக்
கருகி அவ்விருள் கான்று நின் மெய் எலாம்
எரிய நின்று நடுங்கு கின்றாய் எனகு
உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள்
விளக்கவுரை :
1369. கோடி நுண் துகிலும் குழையும் நினக்கு
ஆடு சாந்தமும் அல்லவும் நல்குவேன்
மாடமே நெடியாய் மழை தோய்ந்து உளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்று அரோ
விளக்கவுரை :
1370. ஆடகக் கொழும் பொன் வரை மார்பனைக்
கூடப் புல்லி வையாக் குற்றம் உண்டு எனா
நீடு எரித் திரள் நீள் மணி தூணொடு
சூடகத் திரள் தோள் அணி வாட்டினாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1366 - 1370 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books