சீவக சிந்தாமணி 1361 - 1365 of 3145 பாடல்கள்
1361. நீல் நிறக் குழல் நேர் வளைத் தோளியைத்
தான் உறக்கு இடை நீத்தலும் தன்பினே
வேல் நிறக் கண் விழித்தனள் என்பவே
பால் நிறத் துகில் பைஅரவு அல்குலாள்
விளக்கவுரை :
1362. ஆக்கை உள் உறை ஆவி கெடுத்து அவண்
யாக்கை நாடி அயர்வது போலவும்
சேக்கை நாடித் தன் சேவலைக் காணிய
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள் அரோ
விளக்கவுரை :
[ads-post]
1363. புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என
மல்லல் காளையை வைது மிழற்று வாய்
இல்லின் நீக்கம் உரைத்திலை நீ எனச்
செல்வப் பைங்கிளி தன்னையும் சீறினாள்
விளக்கவுரை :
1364. ஓவியக் கொடி ஒப்பு அருந் தன்மை எம்
பாவை பேதுறப் பாயலின் நீங்கி நீ
போவதோ பொருள் என்றிலை நீ எனப்
பூவை யோடும் புலம்பி மிழற்றினாள்
விளக்கவுரை :
1365. தன் ஒப்பாரை இல்லானைத் தலைச் சென்று எம்
பொன் ஒப்பா ளொடும் போக எனப் போகடாய்
துன்னித் தந்திலை நீ எனத் தூச்சிறை
அன்னப் பேடையொடு ஆற்றக் கழறினாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1361 - 1365 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books