சீவக சிந்தாமணி 1356 - 1360 of 3145 பாடல்கள்
1356. வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில்
சீர் கெழு குருசில் புக்கான் தேசிகப் பாவை என்னும்
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடைக் கமழ் தண் கோதை
ஏர் கெழு மயில் அனாளை இடை வயின் எதிர்ப் பட்டானே
விளக்கவுரை :
1357. சிலம்பு எனும் வண்டு பாட மேகலைத் தேன்கள் ஆர்ப்ப
நலம் கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக்
கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்டப்
புலம்பு போய்ச் சாயல் என்னும் புதுத் தளிர் ஈன்றது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1358. சாந்திடைக் குளித்த வெம்கண் பணை முலைத் தாம மாலைப்
பூந்தொடி அரிவை பொய்கைப் பூமகள் அனைய பொற்பின்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கள் நாளும்
ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான்
விளக்கவுரை :
1359. இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் ஏக வேலான்
அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் முலைப் போகம் நீக்கி
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள் இடை ஏகல் உற்றான்
தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கோர் தேராக நின்றான்
விளக்கவுரை :
1360. தயங்கு இணர்க் கோதை தன்மேல் தண் என வைத்த மென்தோள்
வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
இயங்கு இடை அறுத்த கங்குல் இருள் இடை ஏகினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1356 - 1360 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books