சீவக சிந்தாமணி 1351 - 1355 of 3145 பாடல்கள்
1351. நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை
கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்
ஊறின் வெம் முலையால் உழப்பட்டும் அவ்
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே
விளக்கவுரை :
1352. விரிகதிர் விளங்கு பன்மீன் கதிரொடு மிடைந்து திங்கள்
தெரி கதிர் திரட்டி வல்லான் தெரிந்து கோத்தணிந்த போலும்
சொரி கதிர் முத்தம் மின்னும் துணை முலைத் தடத்தில் வீழ்ந்தான்
புரிகதிர்ப் பொன் செய் மாலைப் புகைநுதிப் புலவு வேலான்
விளக்கவுரை :
[ads-post]
1353. எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகிக்
குழல் மாலைக் கொம்பு ஆகிக் கூர் எயிறு நாப் போழ்தல் அஞ்சி அஞ்சி
உழல் மாலைத் தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள் காறும்
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி
விளக்கவுரை :
1354. மா நீர் மணிமுகிலின் மின்னுக் கொடி நுசுப்பின் மயில் அம் சாயல்
ஏ நீர் இரு புருவம் ஏறி இடை மு£¤ந்து நுடங்கப் புல்லித்
தூநீர் மலர்மார்பன் தொல்நலம் தான் பருகித் துளும்பும் தேறல்
தேனீர் மலர் மாலை தேன் துளித்து மட்டு உயிர்ப்பச் சூட்டினானே
விளக்கவுரை :
1355. தேன் அடைந்து இருந்த கண்ணித் தெண்மட்டுத் துவலை மாலை
ஊன் அடைந்து இருந்த வேல்கண் ஒண் தொடி உருவ வீணை
தான் அடைந்து இருந்த காவில் பாடினாள் தனிமை தீர்வான்
கூன் அடைந்திருந்த திங்கள் குளிர் முத்த முலையினாளே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1351 - 1355 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books