சீவக சிந்தாமணி 1346 - 1350 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1346 - 1350 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1346. கயல் கணாளையும் காமன் அன்னானையும்
இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார்
மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய
இயற்கை அன்பு உடையார் இயைந்தார்களே

விளக்கவுரை :

1347. வாளும் வேலும் மலைந்து அரியார்ந்த கண்
ஆளும் வார் கயல் மைந்தனும் ஆயிடைத்
தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ

விளக்கவுரை :

[ads-post]

1348. தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும்
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன்
மணிக் கண் வெம் முலை தாம் பொர வாய் அவிழ்ந்து
அணிக்கந்து அன்னவன் தார் அங்கு உடைந்ததே

விளக்கவுரை :

1349. பரிந்த மாலை பறைந்தன குங்குமம்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியின்
அரிந்த மேகலை ஆர்த்தன அம்சிலம்பு
பிரிந்த வண்டு இளையார் விளையாடவே

விளக்கவுரை :

1350. கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை
கழுமு சேக்கையுள் காலையும் மாலையும்
தழுவு காதல் தணப்பிலர் செல்பவே
எழுமையும் இயைந்து எய்திய அன்பினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books