சீவக சிந்தாமணி 1341 - 1345 of 3145 பாடல்கள்
1341. உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான்
தௌளிதின் தெரியச் சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி
வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான்
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான்
விளக்கவுரை :
1342. பொன்றிய உயிரை மீட்டான் பூஞ்சிகைப் போது வேய்ந்தான்
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான்
ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா
வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1343. கோப்பெருந் தேவி கொற்றக் கோமகன் இவைகள் நாடி
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்னத்
தூப்புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும்
பூப் புரிந்து அணிந்து கோயில் புதுவது புனைந்தது அன்றே
விளக்கவுரை :
1344. கணி புனைந்து உரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள்
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
அணி உடைக் கமலம் அன்ன அம்கை சேர் முன்கை தன்மேல்
துணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார்
விளக்கவுரை :
1345. மழ களிற்று எருத்தில் தந்த மணிக்குடம் மண்ணும் நீரால்
அழகனை மண்ணுப் பெய்து ஆங்கு அருங் கடிக்கு ஒத்த கோலம்
தொழுதகத் தோன்றச் செய்தார் தூமணிப் பாவை அன்னார்
விழுமணிக் கொடி அனாளும் விண்ணவர் மடந்தை ஒத்தாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1341 - 1345 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books