சீவக சிந்தாமணி 1336 - 1340 of 3145 பாடல்கள்
1336. மின் ஒர் பூம் பொழில் மேதகச் செல்வது ஒத்து
அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி
மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள்
நல் நலம் அவற்கே வைத்த நங்கையே
விளக்கவுரை :
1337. திங்கள் சூழ்ந்த பல் மீன் எனச் செல் நெறி
நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார்
அங்கு அவ் ஆயம் அடிப்பணி செய்தபின்
தங்கள் காதலினால் தகை பாடினார்
விளக்கவுரை :
[ads-post]
1338. தழையும் கண்ணியும் தண் நறு மாலையும்
விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார்
முழையுள் மூரி முழங்கு அரி ஏறு அனான்
பழைய நண்பனைப் பண்புளி எய்தினான்
விளக்கவுரை :
1339. பூமியை ஆடற்கு ஒத்த பொறியினன் ஆதலானும்
மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும்
நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேரும் ஆயின்
நாம் அவற்கு அழகிதாக நங்கையைக் கொடுத்தும் என்றான்
விளக்கவுரை :
1340. மதிதரன் என்னும் மாசுஇல் மந்திரி சொல்லக் கேட்டே
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும்
விதிதர வந்தது ஒன்றே விளங்கு பூண் முலையினாளைக்
கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1336 - 1340 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books