சீவக சிந்தாமணி 1331 - 1335 of 3145 பாடல்கள்
1331. குவளை ஏய்ந்த கொடுங் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர்த் தண் கொடி முல்லையே
விளக்கவுரை :
1332. பொன் துஞ்சு ஆகத்துப் பூங் கண்கள் போழ்ந்த புண்
இன்று இப் பூண் கொள் இள முலைச் சாந்து அலால்
அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையே
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்
விளக்கவுரை :
[ads-post]
1333. கண்ணி வேய்ந்து கருங் குழல் கை செய்து
வண்ண மாலை நடுச் சிகையுள் வளைஇச்
செண்ண அம் சிலம்பு ஏறு துகள் அவித்து
அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் ஆற்றினாள்
விளக்கவுரை :
1334. திங்களும் மறுவும் எனச் சேர்ந்தது
நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ
இங்கு ஒளித்திடுவேன் நுமர் எய்தினார்
கொங்கு ஒளிக்கும் குழலாய் எனக் கூறினான்
விளக்கவுரை :
1335. மழை இடைக் குளித்திட்டது ஓர் வாள் மினின்
தழை இடைக் குளித்தான் தகை வேலினான்
இழை இடைக் குளித்து ஏந்திய வெம்முலை
வழை இடைக் குளித்தார் வந்து தோன்றினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1331 - 1335 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books