சீவக சிந்தாமணி 1326 - 1330 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1326 - 1330 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1326. வரையின் மங்கை கொல் வாங்கு இரும் தூங்கு நீர்த்
திரையின் செல்வி கொல் தேமலர் பாவைகொல்
உரையின் சாயல் இயக்கி கொல் யார் கொல் இவ்
விரை செய் கோலத்து வெள்வளைத் தோளியே

விளக்கவுரை :

1327. மாலை வாடின வாள் கண் இமைத்தன
காலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப்
பாலின் தீம் சொல் பதுமை இந் நின்றவள்
சோலை வேய்மருள் சூழ் வளைத் தோளியே

விளக்கவுரை :

[ads-post]

1328. தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
மேவர் தென் தமிழ் மெய்ப் பொருள் ஆதலின்
கோவத்து அன்ன மென் சீறடிக் கொம்பு அனாள்
பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான்

விளக்கவுரை :

1329. அல்லி சேர் அணங்கு அன்னவட்கு ஆயிடைப்
புல்லி நின்ற மெய்ந் நாண் புறப்பட்டது
கல் செய் தோளவன் காமரு பேர் உணர்வு
எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே

விளக்கவுரை :

1330. களித்த கண் இணை காம்பு என வீங்குதோள்
தெளிர்த்த வெள்வளை சேர்ந்தது மாமையும்
தளித்த சுண்ணம் சிதைந்தன குங்குமம்
அளித்த பூம் பட்டு அணிந்து திகழ்ந்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books