சீவக சிந்தாமணி 1321 - 1325 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1321 - 1325 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1321. முருகு விம்மிய மொய் குழல் ஏழைதன்
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட
அரிவை ஆடிய காவகம் காணிய
எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே

விளக்கவுரை :

1322. மயிலின் ஆடலும் மந்தியின் ஊடலும்
குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண்
வெயிலின் நீங்கிய வெண் மணல் தண் நிழல்
பயிலும் மாதவிப் பந்தர் ஒன்று எய்தினான்

விளக்கவுரை :

[ads-post]

1323. காது சேர்ந்த கடிப் பிணை கையது
தாது மல்கிய தண் கழுநீர் மலர்
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண்
கோதை வெம் முலை மேல் கொண்ட கோலமே

விளக்கவுரை :

1324. விண் புதைப்பன வெண் மலர் வேய்ந்து உளால்
கண் புதைப்பன கார் இரும் பூம் பொழில்
சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி
நண்பனை நினையா நறு மேனியே

விளக்கவுரை :

1325. கறந்த பாலினுள் காசு இல் திருமணி
நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள்
மறைந்த மாதவி மாமை நிழற்றலின்
சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books