சீவக சிந்தாமணி 1316 - 1320 of 3145 பாடல்கள்
1316. மாது யாழ் மழலை மொழி மாதராள்
தாதி அவ்வையும் தன் அமர் தோழியும்
போது வேய் குழல் பொன் அவிர் சாயலுக்கு
யாது நாம் செயல்பாலது என்று எண்ணினார்
விளக்கவுரை :
1317. அழுது நுண் இடை நைய அலர் முலை
முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்தபின்
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார்
எழுது கொம்பு அனையார் இளையாளையே
விளக்கவுரை :
[ads-post]
1318. வேந்து காயினும் வெள் வளை ஆயமோடு
ஏந்து பூம் பொழில் எய்தி அங்கு ஆடுதல்
ஆய்ந்தது என்று கொண்டு அம் மயில் போல் குழீஇப்
போந்தது ஆயம் பொழிலும் பொலிந்ததே
விளக்கவுரை :
1319. அலங்கல் தான் தொடுப்பார் அலர் பூக்கொய்வார்
சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை
கலங்கப் பாய்ந்து உடன் ஆடுநர் காதலின்
இலங்கு பாவை இரு மணம் சேர்த்துவார்
விளக்கவுரை :
1320. தூசு உலாம் நெடுந் தோகையின் நல்லவர்
ஊசல் ஆடுநர் ஒண் கழங்கு ஆடுநர்
பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர்
ஆகி எத்திசையும் அமர்ந்தார்களே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1316 - 1320 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books