சீவக சிந்தாமணி 1311 - 1315 of 3145 பாடல்கள்
1311. வணங்கு நோன் சிலை வார் கணைக் காமனோ
மணம் கொள் பூமிசை மை வரை மைந்தனோ
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை
அணங்குகாள் அறியேன் உரையீர்களே
விளக்கவுரை :
1312. கடை கந்து அன்ன தன் காமரு வீங்கு தோள்
அடையப் புல்லினன் போன்று அணி வெம் முலை
உடைய ஆகத்து உறு துயர் மீட்டவன்
இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே
விளக்கவுரை :
[ads-post]
1313. இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி அன்று
அறிவின் நாடிய அம் மலை மத்தமா
நெறியின் நின்று கடைந்திடப் பட்ட நீர்
மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே
விளக்கவுரை :
1314. நகை வெண் திங்களும் நார்மடல் அன்றிலும்
தகை வெள் ஏற்று அணல் தாழ் மணி ஓசையும்
பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும்
புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே
விளக்கவுரை :
1315. பூ மென் சேக்கையுள் நாற்றிய பூந் திரள்
தாமம் வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇக்
காமர் பேதை தன் கண்தரு காமநோய்
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1311 - 1315 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books