சீவக சிந்தாமணி 1306 - 1310 of 3145 பாடல்கள்
1306. முருகு வார் குழலாள் முகிழ் மெல் முலை
பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று
உருகும் நுண் இடை ஓவியப் பாவைதன்
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே
விளக்கவுரை :
1307. புகை அவாவிய பூந்துகில் ஏந்து அல்குல்
வகைய ஆம் மணி மேகலை வார் மது
முகை அவாவிய மொய் குழல் பாவியேன்
பகைய வாய்ப் படர் நோய் பயக் கின்றவே
விளக்கவுரை :
[ads-post]
1308. போது உலாம் சிலையோ பொரு வேல் கணோ
மாது உலாம் மொழியோ மட நோக்கமோ
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள்
காதலால் கடைகின்றது காமமே
விளக்கவுரை :
1309. அண்ணல் அவ்வழி ஆழ் துயர் நோய் உற
வண்ண மா மலர்க் கோதையும் அவ்வழி
வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து
உள் நையா உருகா உளள் ஆயினாள்
விளக்கவுரை :
1310. பெயல் மழை பிறழும் கொடி மின் இடைக்
கயல் மணிக் கணின் நல்லவர் கை தொழப்
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைந்தொடி
மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1306 - 1310 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books