சீவக சிந்தாமணி 1301 - 1305 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1301 - 1305 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1301. கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்பப்
பொன் அடி கழீஇய பின்றைப் புரிந்து வாய் நன்கு பூசி
இன்மலர்த் தவிசின் உச்சி இருந்து அமிர்து இனிதின் கொண்டான்
மின் விரிந்து இலங்கு பைம் பூண் வேல் கணார் வேனிலானே

விளக்கவுரை :

1302. வாச நல் பொடியும் நீரும் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
பூசறுத்து அம் கை நீரை மும்முறை குடித்து முக்கால்
காசு அறத் துடைத்த பின்றைக் கை விரல் உறுப்புத் தீட்டித்
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான்

விளக்கவுரை :

[ads-post]

1303. சீர் கொளச் செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல
வார் கழல் குருசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண்
போர் கொள்வேல் மன்னன் எல்லாக் கலைகளும் புகன்று கேட்டு
நீர் கொள் மாக்கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான்

விளக்கவுரை :

1304. பரிதி பட்டது பன் மணி நீள் விளக்கு
எரிய விட்டனர் இன்னியம் ஆர்த்தன
அரிய பொங்கு அணை அம் என் அமளிமேல்
குரிசில் ஏறினன் கூர்ந்தது சிந்தையே

விளக்கவுரை :

1305. பூங் கண் அவ்வயின் நோக்கம் பொறாத போல்
வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின வெம் முலை
ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது
பாங்கு இலாரின் பரந்து உள அல்குலே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books