சீவக சிந்தாமணி 1296 - 1300 of 3145 பாடல்கள்
1296. விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார்
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார்
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மாமுடிக் குரிசில் நாளை
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையைக் கொடுக்கும் என்பார்
விளக்கவுரை :
1297. விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின்போல்
வளம் கெழு வடத்தைச் சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்பச் சேந்த
இளங் கதிர் முலைகள் தம்மால் இவனை மார்பு எழுதி வைகின்
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது எனச் சொல்லி நிற்பார்
விளக்கவுரை :
[ads-post]
1298. அருந்தவம் செய்து வந்த ஆயிழை மகளிர் யார் கொல்
பெருந்தகை மார்பில் துஞ்சிப் பெண்மையால் பிணிக்கும் நீரார்
கருங்கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லித்
திருந்து ஒளி முறுவல் செவ்வாய்த் தீம் சொலார் மயங்கினாரே
விளக்கவுரை :
1299. பல் மலர் படலைக் கண்ணிக் குமரனைப் பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி வாச நெய் பூசி நல்நீர்
துன்னினர் ஆட்டிச் செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும்
இன் நறும் புகையும் பூவும் கலத்தொடும் ஏந்தினாரே
விளக்கவுரை :
1300. ஏந்திய ஏற்பத் தாங்கி எரிமணிக் கொட்டை நெற்றி
வாய்ந்த பொன் குயிற்றிச் செய்த மரவடி ஊர்ந்து போகி
ஆய்ந்த நல் மாலை வேய்ந்த அரும் பெறல் கூடம் சேர்ந்தான்
பூந் தொடி மகளிர் போற்றிப் பொன்கலம் பரப்பினாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1296 - 1300 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books