சீவக சிந்தாமணி 1291 - 1295 of 3145 பாடல்கள்
1291. நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில்
போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன்நிறப் பசலை மூழ்கிற்று
ஆக்கினாள் அநங்கன் அப்புத் தூணியை அமருள் ஆனாது
ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள்
விளக்கவுரை :
1292. ஆட்சி ஐம் பொறியாளன் உடம்பு எனும்
பூட்சி நீள் கொடிப் புற்றின் அகத்து உறை
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல்
வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள்
விளக்கவுரை :
[ads-post]
1293. மாழ்கி வெய்து உயிர்த்தாள் மடவாள் எனத்
தோழி மார்களும் தாயரும் தொக்கு உடன்
சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும்
வாழி என்றனர் வம்பு அலர் கோதையர்
விளக்கவுரை :
1294. கண்ணின் காணினும் கட்டுரை கேட்பினும்
நண்ணித் தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று
எண்ணி ஏந்திழை தன்னை உடம்பு எலாம்
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்பத் தைவந்தான்
விளக்கவுரை :
1295. மற்ற மாதர் தன் வாள் தடம் கண்களால்
உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில்
சுற்றி வள்ளலைச் சோர்வு இன்றி யாத்திட்டாள்
அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1291 - 1295 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books