சீவக சிந்தாமணி 1286 - 1290 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1286 - 1290 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1286. பொழிந்து நஞ்சு உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம்
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும்
பிழிந்து உயிர் உண்ணும் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர்
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான்

விளக்கவுரை :

1287. அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
நந்தியா வட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
தந்தியாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன் நாறும்
பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1288. கன்னியைக் கடித்த நாகம் கன்னியே கன்னி நோக்கம்
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழிந்தி ஆழ்ந்த
கொன்னும் மா நாகம் கொண்டால் கொப்புள் ஆம் விரலின் தேய்த்தால்
மன்னிய தௌ மட்டாயின் மண்டலிப் பாலது என்றான்

விளக்கவுரை :

1289. குன்று இரண்டு அனைய தோளான் கொழுமலர்க் குவளைப் போது அங்கு
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கிடை மயிலனாள் தன்
சென்று இருண்டு அமைந்த கோலச் சிகழிகை அழுத்திச் செல்வன்
நின்று இரண்டு உருவம் ஓதி நேர்முகம் நோக்கினானே

விளக்கவுரை :

1290. நெடுந் தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோலக்
கடுங் கதிர்க் கனலி கோப்பக் கார் இருள் உடைந்ததே போல்
உடம்பு இடை நஞ்சு நீங்கிற்று ஒண் தொடி உருவம் ஆர்ந்து
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books