சீவக சிந்தாமணி 1281 - 1285 of 3145 பாடல்கள்
1281. நங்கைக்கு இன்று இறத்தல் இல்லை நரபதி நீயும் கோண்மோ
கொங்கலர் கோங்கின் நெற்றிக் குவி முகிழ் முகட்டின் அங்கண்
தங்கு தேன் அரவயாழின் தான் இருந்து ஆந்தை பாடும்
இங்கு நம் இடரைத் தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான்
விளக்கவுரை :
1282. பன்மணிக் கடகம் சிந்தப் பருப்புடை பவளத் தூண் மேல்
மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து மாழாந்து சொன்னான்
இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி
தன்னைக் கூய்க் கொணர்மின் என்றான் தர வந்து ஆங்கு அவனும் கண்டான்
விளக்கவுரை :
[ads-post]
1283. பறவை மா நாகம் வீழ்ந்து பல உடன் பதைப்ப போன்றும்
சிறகுறப் பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றும்
கறவை கன்று இழந்த போன்றும் கிடந்து அழுகின்ற கண்ணார்
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான்
விளக்கவுரை :
1284. ஊறு கொள் சிங்கம் போல உயக்கமோடு இருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்று உன்
வீறு உயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி இன்னே
நாறு பூங் கொம்பனாளை நோக்கு என நம்பி சொன்னான்
விளக்கவுரை :
1285. புற்று இடை வெகுளி நாகம் போக்கு அறக் கொண்டதேனும்
மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்ததேனும்
பொன் தொடிக்கு இறத்தல் இல்லை புலம்பு கொண்டு அழேற்க என்றான்
கற்று அடிப்படுத்த விஞ்சைக் காமரு காமன் அன்னான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1281 - 1285 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books