சீவக சிந்தாமணி 1276 - 1280 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1276 - 1280 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1276. மண்டலி மற்றிது என்பார் இராசமா நாகம் என்பார்
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில்
பிண்டித்துப் பெருகிற்று என்பார் பெருநவை அறுக்கும் விஞ்சை
எண்தவப் பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார்

விளக்கவுரை :

1277. சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார்
குரைபுனல் இடுதும் என்பார் கொந்தழல் உறுத்தும் என்பார்
இரை என வருந்தக் கவ்வி என்பு உறக் கடித்தது என்பார்
உரையன்மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார்

விளக்கவுரை :

[ads-post]

1278. கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி எல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்
உய்வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார்
மையல் அம் கோயில் மாக்கள் மடை திறந் திட்டது ஒத்தார்

விளக்கவுரை :

1279. வெந்து எரி செம் பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார்
மந்திரம் மறையும் வல்லார் எழாயிரர் மறு இல் வாய்மை
அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அங் கை கொட்டிப்
பைந்தொடிப் பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார்

விளக்கவுரை :

1280. பாம்பு எழப் பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல்
தேம்பிழி கோதைக்கு இன்று பிறந்த நாள் தெளிமின் என்று
காம்பு அழி பிச்சம் ஆகக் கணி எடுத்து உரைப்பக் கல்லென்
தூம்பு அழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books