சீவக சிந்தாமணி 1271 - 1275 of 3145 பாடல்கள்
1271. நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
அங்கு உறை அரவு தீண்டி ஓளவையோ என்று போகக்
கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர்
செங் கயல் கண்ணி தோழி திருமகள் சென்று சேர்ந்தாள்
விளக்கவுரை :
1272. அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளைத் தொழுது நங்கை
அடிகளைப் புல்லி ஆரத் தழுவிக் கொண்டு ஒளவைமாரை
கொடி அனாய் என்னை நாளும் நினை எனத் தழுவிக் கொண்டு
மிடை மின்னின் நிலத்தைச் சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1273. துமையைப் பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்திக்
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க எனக் குருசில் ஏகிக்
கதும் எனச் சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த
மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான்
விளக்கவுரை :
1274. வள்ளல் தான் வல்ல எல்லாம் மாட்டினன் மற்றும் ஆங்கண்
உள்ளவர் ஒன்றலாத செயச் செய ஊறு கேளாது
அள் இலைப் பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன
வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே
விளக்கவுரை :
1275. பைங்கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம்
நங்கையைச் செற்றது ஈங்குத் தீர்த்து நீர் கொள்மின் நாடும்
வங்க மா நிதியம் நல்கி மகள் தரும் மணிசெய் மான்தேர்
எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடிமுரசு எருக்கினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1271 - 1275 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books