சீவக சிந்தாமணி 1266 - 1270 of 3145 பாடல்கள்
1266. தேன் உகுக்குகின்ற கண்ணித் திருமகள் ஆட இப்பால்
ஊன் உகுக்குகின்ற வைவேல் ஒரு மகன் உருமின் தோன்றி
வான் உகுக்குகின்ற மீன் போல் மணி பரந்து இமைக்கும் மார்பில்
கான் உகுக்குகின்ற பைந்தார்க் காவலன் தொழுது சொன்னான்
விளக்கவுரை :
1267. கொய்தகைப் பொதியில் சோலைக் குழவிய முல்லை மௌவல்
செய்ய சந்து இமயச் சாரல் கருப்புரக் கன்று தீம்பூக்
கை தரு மணியின் தெண்ணீர் மதுக் கலந்து ஊட்டி மாலை
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே
விளக்கவுரை :
[ads-post]
1268. பவழம் கொள் கோடு நாட்டிப் பைம் பொனால் வேலி கோலித்
தவழ் கதிர் முத்தம் பாய்த்தித் தன்கையால் தீண்டி நன்னாள்
புகழ் கொடி நங்கை தன்பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை
அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ
விளக்கவுரை :
1269. வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடிக்
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக எனக் குனிந்த வில் கீழ்
அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி
கம்பலம் போர்த்த போலும் கடி மலர்க் காவு புக்காள்
விளக்கவுரை :
1270. நற விரி சோலை ஆடி நாள் மலர்க் குரவம் பாவை
நிறைய பூத்து அணிந்து வண்டும் தேன்களும் நிழன்று பாட
இறைவளைத் தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து
பெறல் அரும் பாவை கொள்வாள் பெரிய தோள் நீட்டினாளே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1266 - 1270 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books