சீவக சிந்தாமணி 1261 - 1265 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1261 - 1265 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1261. கருஞ் சிறைப் பறவை ஊர்திக் காமரு காளை தான் கொல்
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அருங் குருசில் தான் கொல்
அரும் பெறல் குமரன் என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள்
திருந்து இழை அணங்கு மென் தோள் தேசிகப் பாவை அன்னாள்

விளக்கவுரை :

1262. போது எனக் கிடந்த வாள் கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி
மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையைத் தானும் கண்டான்
காதலில் களித்தது உள்ளம் காளையைக் கொணர்மின் என்றான்

விளக்கவுரை :



[ads-post]

1263. கை வளர் கரும்பு உடைக் கடவுள் ஆம் எனின்
எய் கணை சிலையினோடு இவன்கண் இல்லையால்
மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார்

விளக்கவுரை :

1264. மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்கு கின்ற
அந்தர குமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர் கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன் என்றான்

விளக்கவுரை :

1265. போது அவிழ் தெரியலானும் பூங் கழல் காலினானும்
காதலின் ஒருவர் ஆகிக் கலந்து உடன் இருந்த போழ்தின்
ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கிப்
போது கண்டு அனைய வாள் கண் புருவத்தால் கலக்குகின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books