சீவக சிந்தாமணி 1256 - 1260 of 3145 பாடல்கள்
1256. பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும்
கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற
ஓடு அரி நெடுங் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா
ஈடு அமை பசும் பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்
விளக்கவுரை :
1257. வாள் நுதல் பட்டம் மின்ன வார் குழை திருவில் வீசப்
பூண் முலைப் பிறழப் பொன் தோடு இடவயின் நுடங்க ஒல்கி
மாண் இழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள்
காண் வரு குவளைக் கண்ணால் காளை மேல் நோக்கினாளே
விளக்கவுரை :
[ads-post]
1258. நோக்கினாள் நெடுங் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு
வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினைப் பருக இப்பால்
ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு அனாள் நெடும் கண் பில்கி
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே
விளக்கவுரை :
1259. செருக் கயல் நெடுங் கணாள் அத் திருமகன் காண்டல் அஞ்சி
நெருக்கித் தன் முலையின் மின்னும் நிழல் மணி வடத்தை மாதர்
பொருக்குநூல் பரிந்து சிந்தாப் பூ எலாம் கரிந்து வாடத்
தரிக்கிலாள் காமச் செந் தீ தலைக் கொளச் சாம்பினாளே
விளக்கவுரை :
1260. கன்னிமை கனிந்து முற்றிக் காமுறக் கமழும் காமத்து
இன் நறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை
பொன்னினால் உடையும் கற்பு என்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார்
இன்னிசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1256 - 1260 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books