சீவக சிந்தாமணி 1251 - 1255 of 3145 பாடல்கள்
1251. அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின்
முகில் தலை விலங்கிய மொய் கொள் நீள் கொடிப்
பகல் தலை விலங்கு சந்திராபம் பான்மையின்
இகல் தலை விலங்கு வேல் காளை எய்தினான்
விளக்கவுரை :
1252. மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு
பலர் நலம் பழிச்சுபு பரவ ஏகினான்
அலர் கதிர் கரும்பிளை மடுப்ப ஆய்நகர்
உலகு அளந்தான் என உள்புக்கான் அரோ
விளக்கவுரை :
[ads-post]
1253. சந்தனக் காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை
வந்து வீழ்மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து
இந்திர குமரன் போல இறை மகன் இருந்து காண
அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்று கின்றார்
விளக்கவுரை :
1254. குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும்
அழல் அவிர் செம் பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி
நிழல் அவிர் அல்குல் காசு சிலம்பொடு சிலம்ப நீள்தோள்
அழகி கூத்து ஆடுகின்றாள் அரங்கின்மேல் அரம்பை அன்னாள்
விளக்கவுரை :
1255. தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயிலத் தண்பூங்
கண்ணொடு புருவம் கை கால் கலை அல்குல் நுசுப்புக் காமர்
ஒண்ணுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1251 - 1255 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books