சீவக சிந்தாமணி 1246 - 1250 of 3145 பாடல்கள்
1246. முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின்
தரணி மேல் தந்து அளித்த தத்துவன்தான் யாரே
தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி
அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீ அன்றே
விளக்கவுரை :
1247. தீரா வினை தீர்த்துத் தீர்த்தம் தெரிந்து உய்த்து
வாராக் கதி உரைத்த வாமன்தான் யாரே
வாராக் கதி உரைத்த வாமன் மலர் ததைந்த
கார் ஆர் பூம் பிண்டிக் கடவுள் நீ அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1248. அம் மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர்
பொன் மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம் மலைத் தெய்வதம் விருந்து செய்தபின்
செம்மல் போய்ப் பல்லவ தேயம் நண்ணினான்
விளக்கவுரை :
1249. அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடைக்
கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர்
வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர்
இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான்
விளக்கவுரை :
1250. அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரைப்
பன்மலர்க் கிடங்கு சூழ் பசும் பொன் பாம்புரிக்
கன்னி மூது எயில் கடல் உடுத்த காரிகை
பொன் அணிந்து இருந்து எனப் பொலிந்து தோன்றுமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1246 - 1250 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books