சீவக சிந்தாமணி 1241 - 1245 of 3145 பாடல்கள்
1241. தண் கயம் குற்ற போதும் தாழ்சினை இளிந்த வீயும்
வண் கொடிக் கொய்த பூவும் வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித்
திண் புகழ் அறிவன் பாதம் திருந்து கைத் தலத்தின் ஏற்றிப்
பண்பு கொள் குணம் கொள் கீதம் பாணியில் பாடுகின்றான்
விளக்கவுரை :
1242. ஆதி வேதம் பயந்தோய் நீ அலர் பெய்ம் மாரி அமைந்தோய் நீ
நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகர் இல் காட்சிக்கு இறையோய் நீ
நாதன் என்னப் படுவோய் நீ நவை செய் பிறவிக் கடலகத்து உன்
பாத கமலம் தொழுவேங்கள் பசை யாப்பு அவிழப் பணியாயே
விளக்கவுரை :
[ads-post]
1243. இன்னாப் பிறவி இகந்தோய் நீ இணை இல் இன்பம் உடையோய் நீ
மன்னா உலகம் மறுத்தோய் நீ வரம்பு இல் காட்சிக்கு இறையோய் நீ
பொன்னார் இஞ்சிப் புகழ் வேந்தே பொறியின் வேட்கைக் கடல் அழுந்தி
ஒன்னா வினையின் உழல்வேங்கள் உயப்போம் வண்ணம் உரையாயே
விளக்கவுரை :
1244. உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ
திலகம் ஆய திறலோய் நீ தேவர் ஏத்தப் படுவோய் நீ
அலகை இல்லாக் குணக் கடலே யாரும் அறியப்படாய் ஆதி
கொலை இல் ஆழி வலன் உயர்த்த குளிர் முக்குடையின் நிழலோய் நீ
விளக்கவுரை :
1245. அடி உலகம் ஏத்தி அலர் மாரி தூவ
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று
கடி மதிலும் கட்டு அழித்த காவலன் நீ அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1241 - 1245 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books