சீவக சிந்தாமணி 1236 - 1240 of 3145 பாடல்கள்
1236. உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர்கதி சேறி ஏடா
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உணக் காட்டுள் இன்றே
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய்
இறுதிக் கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்
விளக்கவுரை :
1237. என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கிச்
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
குன்று உறை குறவன் போகக் கூர் எரி வளைக்கப் பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டு இனப் பரிவு தீர்த்தான்
விளக்கவுரை :
[ads-post]
1238. இலங்கு ஒளி மரகதம் இடறி இன் மணி
கலந்து பொன் அசும்பு கான்று ஒழுகி மான் இனம்
சிலம்பு பாய் வருடையொடு உகளும் சென்னி நீள்
விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான்
விளக்கவுரை :
1239. அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ்
வெந்து எரி பசும் பொனின் விழையும் வெல் ஒளி
மந்திர வாய்மொழி மறு இல் மாதவர்
இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான்
விளக்கவுரை :
1240. முனிவரும் முயன்று வான் கண் மூப்பு இகந்து இரிய இன்பக்
கனி கவர் கணனும் ஏத்தக் காதி கண் அரிந்த காசு இல்
தனி முதிர் கடவுள் கோயில் தான் வலம் கொண்டு செல்வான்
குனி திரை முளைத்த வெய்யோன் குன்று சூழ்வதனை ஒத்தான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1236 - 1240 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books