சீவக சிந்தாமணி 1231 - 1235 of 3145 பாடல்கள்
1231. கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழுந் தடி நறவொடு ஏந்திப்
பிடி முதிர் முலையினாள் தன் தழைத் துகில் பெண்ணினோடும்
தொடு மரைத் தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற
வடி நுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான்
விளக்கவுரை :
1232. மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற
சோலை சூழ் வரையின் நெற்றிச் சூழ் கிளி சுமக்கல் ஆற்றா
மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்குத் தென்மேல்
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1233. ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி
மோழலம் பன்றியோடு முளவுமாக் காதி அட்ட
போழ் நிணப் புழுக்கல் தேன் நெய் பொழிந்து உகப் பெய்து மாந்தித்
தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான்
விளக்கவுரை :
1234. ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழிமின் என்னக்
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன்தேன் கை விட்டால்
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும் கொல் என்றான்
விளக்கவுரை :
1235. ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ
ஊன் தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ
ஊன்றி இவ் இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1231 - 1235 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books