சீவக சிந்தாமணி 1226 - 1230 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1226 - 1230 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1226. வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும்
தாள் ஒழியப் போரேறு தனியே போந்தது என எண்ணி
நீள் அருவிக் கண்ணீர் வீழ்த்து அலறி வண்ணம் கரிந்து உருகிக்
கோள் உழுவை அன்னாற்கு குன்றமும் நின்று அழுதனவே

விளக்கவுரை :

1227. மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லாச் சிறியார் போல்
நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கைத்
தக்கார் போல் கைம் மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே
தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றித் துளங்கினவே

விளக்கவுரை :

[ads-post]

1228. கொல்லை அகடு அணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனி நும்மைப்
பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தித்
தொல்லை நிறம் கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே

விளக்கவுரை :

1229. தோடு ஏந்து பூங் கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல்
பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல்
கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்டக் கூடா பிடி நிற்கும்
காடு ஏந்து பூஞ் சாரல் கடந்தான் காலின் கழலானே

விளக்கவுரை :

1230. காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான்
ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கி உள்ளான்
வாழ் மயிர்க் கரடி ஒப்பான் வாய்க்கு இலை அறிதல் இல்லான்
மேழகக் குரலினான் ஓர் வேட்டுவன் தலைப் பட்டானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books