சீவக சிந்தாமணி 1221 - 1225 of 3145 பாடல்கள்
1221. ஆறு இரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து மற்று உன்
வீறு உயர் முடியும் சூடி விழு நிலக் கிழமை பூண்டு
சாறு அயர்ந்து இறைவன் பேணிச் சார்பு அறுத்து உய்தி என்று
கூறினன் கதிர்கள் பொங்கும் குளிர் மணி முடியினானே
விளக்கவுரை :
1222. சொல்திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறு வேறு உரைப்பக் கேட்டே
சுற்றிய தோழி மாரை விடுத்தனன் தொழுது நின்றான்
கற்பக மரமும் செம் பொன் மாரியும் கடிந்த கையான்
விளக்கவுரை :
[ads-post]
1223. சேட்டு இளம் செங் கயல் காப்பச் செய்து வில்
பூட்டி மேல் வைத்து அன புருவப் பூ மகள்
தீட்டிரும் திரு நுதல் திலமே என
மோட்டிரும் கதிர் திரை முளைத்தது என்பவே
விளக்கவுரை :
1224. அழல் பொதிந்த நீள் எஃகின் அலர்தார் மார்பற்கு இம்மலை மேல்
கழல் பொதிந்த சேவடியால் கடக்கல் ஆகாது என எண்ணிக்
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கிக் கொண்டு ஏந்தி
நிழல் பொதிந்த நீள் முடியான் நினைப்பில் போகி நிலத்து இழிந்தான்
விளக்கவுரை :
1225. வண் தளிர்ச் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை
மண் கருதும் வேலானை மறித்தும் காண்க எனப் புல்லிக்
கொண்டு எழுந்தான் வானவனும் குருசில் தானே செலவு அயர்ந்தான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1221 - 1225 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books