சீவக சிந்தாமணி 1216 - 1220 of 3145 பாடல்கள்
1216. நெட்டிடை நெறிகளும் நிகர் இல் கானமும்
முட்டுடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும்
நட்புடை இடங்களும் நாடும் பொய்கையும்
உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான்
விளக்கவுரை :
1217. செல்கதி மந்திரம் செவியில் செப்பிய
மல்லல் அம் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க எனச்
சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே
விளக்கவுரை :
[ads-post]
1218. கடுந் தொடைக் கவர் கணைக் காமன் காமுறப்
படும் குரல் தரும் இது பாம்பும் அல்லவும்
கடுந் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய
உடம்பு இது தரும் என உணரக் கூறினான்
விளக்கவுரை :
1219. கந்தடு களிறு கொல்லும் கருவரை உழுவை அன்னான்
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைந்தார்
இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கிச்
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான்
விளக்கவுரை :
1220. மனைப் பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று
எனைத் தொரு மதியின் ஆம் கொல் எய்துவது என்று நெஞ்சில்
நினைத்தலும் தோழன் நக்கு நிழல் உமிழ்ந்து இலங்கு செம்பொன்
பனைத் திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1216 - 1220 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books