சீவக சிந்தாமணி 1211 - 1215 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1211 - 1215 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1211. கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடிப்
பெரியவன் திருமொழி பிறழ்தல் இன்றியே
மரியவர் உறைதலின் மதன கீதமே
திரிதரப் பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே

விளக்கவுரை :

1212. ஏற்றரு மணிவரை இறந்து போனபின்
மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமே
போல் பல கவர்களும் பட்டது ஆயிடை
ஆற்றல் சால் செந்நெறி அறியக் கூறுவாம்

விளக்கவுரை :

[ads-post]

1213. சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அச்சுனை
மருங்கில் ஓர் மணிச் சிலா வட்டம் உண்டு அவண்
விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின்
மருங்கில் ஓர் செந்நெறி வகுக்கப் பட்டதே

விளக்கவுரை :

1214. கைம் மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம்
மொய்ம் மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வைம் மலர்த்து இலங்கும் வெள்வேல் மத்திம தேயம் ஆளும்
கொய்ம் மலர்த் தாரினானைக் கண்ணுறு குணம் அது என்றான்

விளக்கவுரை :

1215. மண் அகம் காவல் மன்னன் மாதரம் பாவை மாசு இல்
ஒண் நுதல் மகளைத் தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள்
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற
அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books