சீவக சிந்தாமணி 1206 - 1210 of 3145 பாடல்கள்
1206. அண்ணல் மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து அவண்
மண்ணின் மேல் மாந்தர்கள் மொய்க்கும் வாவியை
எண்ணம் ஒன்று இன்றியே இடத்து இட்டு ஏகினால்
துண் எனச் சிலையவர் தொழுது காண்பவே
விளக்கவுரை :
1207. பாடல் வண்டு யாழ் செயும் பசும் பொன் கிண்கிணித்
தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை
ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல் போல்
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐங் காதமே
விளக்கவுரை :
[ads-post]
1208. கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகைப்
போது வேய்ந்து இனமலர் பொழிந்து கற்புடை
மாதரார் மனம் எனக் கிடந்த செந்நெறி
தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே
விளக்கவுரை :
1209. மணி இயல் பாலிகை அனைய மாச்சுனை
அணி மணி நீள் மலர் அணிந்தது ஆயிடை
இணை மலர்ப் படலிகை போலும் ஈர்ம் பொழில்
கணை உமிழ் சிலையினாய் கண்டு சேறியே
விளக்கவுரை :
1210. இலைப் பொலி பூண் முலை எரி பொன் மேகலைக்
குலத்தலை மகளிர் தம் கற்பின் திண்ணிய
அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ்
வலத்தது வனகிரி மதியின் தோன்றுமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1206 - 1210 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books